INFO LINKS

Wednesday, 23 November 2016

அதீத விரயங்கள் நிற்க அமானுஷ்ய பரிகாரம்

அதீத விரயங்கள் நிற்க அமானுஷ்ய பரிகாரம்
கொடுக்கப்படும் விஷயமானது மிக வீரியமான ஒன்றாகும். ஒரு முறை நேரடி ஆலோசனைக்கு வந்த ஒரு தொழிலதிபரின் விஷயங்களை சோதிக்க, அவருக்கு தெரியாமல் நிறைய பணம் அவரின் கட்டுப்பாடின்றி விரயமாகி கொண்டிருந்தது தெரிய வந்தது..மிகுந்த லாபம் இருப்பினும் கடன் வாங்கும் சூழலில் மாட்டி கொண்டார்.நாம் சொன்ன விஷயத்தை அவர் செய்து முடித்த ஒரு சில நாட்களுக்குள், தொழிற்சாலையில் பல நபர்கள் இட மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு, மிக குறுகிய நாட்களில் அதீத செலவுகள் மற்றும் விரயங்கள் நின்று, தொழில் வளர ஆரம்பித்தது. பண விஷயங்களை பொறுத்த வரை இது போன்று ஏராளம் உள்ளன. நபருக்கு நபர் மாறுபடும். எனினும், பிரத்யேகமான இது, அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.வீட்டில் அதீத விரயங்கள் ஏற்படினும் செய்து பலனடையலாம்.
பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரேயை நன்றாக சுத்தம் செய்து, ஒவ்வொரு கப்பிலும் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இட்டு,பின் ஒவ்வொன்றிலும் ஒரு புதினா இலையை வைக்கவும். பின் அனைத்திலும் நீர் ஊற்றி,மனதில் அதீத செலவுகள்/விரயங்கள் கட்டுப்படவேண்டும் என்று பஞ்ச பூதங்களையும்,இஷ்ட தெய்வத்தையும் வேண்டி, பிரீசரில் வைத்து விடவும். .
வீண் விரயங்கள் கட்டுக்குள் வருவதை கண் கூடாக காணலாம். செலவுகள் கட்டுக்கடங்கிய நிலை வந்ததும் நாணயங்களை வெளியே எடுத்து உபயோகிக்கலாம். நீரை மற்றும் புதினா இலையை எங்கு வேண்டுமானாலும் அப்புறப்படுத்திவிடலாம்.
முக்கிய குறிப்பு : மேற்கண்ட விஷயம் 15 நாட்களுக்கு மேல் செய்யக்கூடாது. அடிக்கடி செய்வதும் தவிர்க்கப்படவேண்டும்

PIPE CUTTING WORK AND CHAMFERING WITH DE BURRING JOB WORKS UNDER TAKEN

VID 20161005 WA00011

1st Saturday